தொடர் கதையானது கொலை, கொள்ளை
அவனியாபுரம்: ''தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள், கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்கதையாகி விட்டது,'' என, த.மா.கா., தலைவர் வாசன் வேதனை தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள், கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் அனைத்தும் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
'ஆன்லைன்' சூதாட்டத்திற்கு உடனே சட்ட திருத்தத்தை கொண்டு வந்து முற்றிலுமாக தடுக்க வேண்டும்.
வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பிரச்னையில், தமிழக நலன் காக்கப்பட வேண்டும் என, த.மா.கா., விரும்புகிறது.
தமிழகத்தில் வட மாநிலத்தவர்களின் பங்கு மிகவும் அதிகமாக உள்ளது. வட மாநில தொழிலதிபர்கள் இங்கு வந்து, நமக்கு வாய்ப்புகள் கொடுக்கும் போது, அங்குள்ளவர்கள் இங்கு வந்து வேலை செய்வதில் எந்த தவறும் கிடையாது.
கடந்த ஆட்சியில் தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், தற்போதைய தி.மு.க., அமைச்சர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
காழ்ப்புணர்ச்சி அரசியலை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். சரியான தருணத்தை எதிர்பார்க்கின்றனர். தவறாக செயல்படுவோருக்கு லோக்சபா தேர்தலில் சரியான பதிலடி கொடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!