ADVERTISEMENT
மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சி, 17வது வார்டு, கீழக்கரணையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளும் உள்ளன.
மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான வெளி மாவட்டம், மாநிலங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருந்து வந்தது. இதனால், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண்பதில், போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. போலீசாரும் கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் குறித்து அறிவுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, 4 கண்காணிப்பு கேமராக்கள், கீழக்கரணை பிரதான சாலை மற்றும் அன்னை தெரசா தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பதிவுகளை, கம்ப்யூட்டர் மூலம் அருகில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து, மறைமலைநகர் போலீசார் கண்காணிக்க உள்ளனர். இந்த கேமராக்களை, மறைமலை நகர் காவல் நிலைய சட்டம் -- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முத்து சுப்ரமணியம் திறந்து வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!