மதுராந்தகத்தில் திடீர் கனமழை
மதுராந்தகம்: மதுராந்தகம், சித்தாமூர் பகுதிகளில், அரை மணி நேரமாக கன மழை பெய்தது. திடீரென பெய்த மழையால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
கடந்த சில நாட்களாக, கோடை வெயில் அதிகரித்த நிலையில், மழை பெய்ததால் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஒரே நாளில், மழை, வெயில், குளிர்ச்சியான சூழ்நிலை அமைந்தது.
இது குறித்து, அச்சிறுபாக்கம் வட்டார மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுரேஷ் கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக, கோடை மழை பெய்து வருகிறது. மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும். தற்போது, சீதோஷ்ண நிலை காரணமாக, காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் அதிகரிக்கும். ஆகையால், கொதிக்க வைத்த நீர் அருந்தவும், அனைவரும் முகக் கவசம் அணிந்து, வெளியில் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!