ADVERTISEMENT
குன்றத்துார்: குன்றத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இரு நாட்களாக, அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, குன்றத்துார் நான்கு சாலை சந்திப்பில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், மழை நீர் தேங்கி ஏரி போல் காட்சிஅளிக்கிறது.
பள்ளியை ஒட்டி ஏராளமான மரங்கள் இருப்பதாலும், மைதானத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பதாலும், ஏரி என நினைத்து ஏராளமான பறவைகள் முகாமிட்டு உள்ளன.
இதை, பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
விடுமுறை நாளில் இளைஞர்கள், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.
நேற்று, தேங்கியிருந்த தண்ணீரை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர். தண்ணீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!