ADVERTISEMENT
சாலை சந்திப்பு மின் விளக்கை சீரமைக்க வேண்டுகோள்
செய்யூர் அருகே சித்தாற்காடு கிராமத்தில், செய்யூர், வில்லிப்பாக்கம், நல்லுார், அமந்தங்கருணை போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலைகளின் சந்திப்பு உள்ளது.
இந்த சாலை சந்திப்பில், மின் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்கு பழுதடைந்துள்ளதால், இரவு நேரத்தில் சாலை சந்திப்பு இருளில் மூழ்கி காணப்படுகிறது.
சாலை சந்திப்பில் பழுதடைந்துள்ள மின் விளக்கை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இ.சுந்தரமூர்த்தி, நல்லுார் கிராமம்.
குடிநீர் கிணற்றுக்கு மேல்மூடி அமைக்க கோரிக்கை
திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில், ஏரி பகுதியில் குடிநீர் கிணறு உள்ளது. இதன் மூலம், குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் கிணற்றில், ஏற்கனவே அமைக்கப்பட்ட மேல்மூடி சேதமடைந்து, ஆங்காங்கே திறந்த நிலையில் உள்ளது. குடிநீர் மாசடையாமல் தடுக்கவும், பாதுகாப்பு கருதியும் மேல்மூடி அமைக்க வேண்டும்.
- எம்.ஜனார்த்தனன், செம்பாக்கம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!