ADVERTISEMENT
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், முக்கிய வர்த்தக பயிரான கரும்பை, விவசாயிகள் பயிரிடுகின்றனர். சர்க்கரை தயாரிப்பிற்காக, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் தாலுகா பகுதிகளில் அதிக அளவில் கருப்பு சாகுபடி செய்யப்படுகிறது.
கரும்பு முதிர்ந்ததும், படாளம் பகுதியில் இயங்கும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவைக்கு ஒப்படைக்கப்படும்.
ஒருமுறை நடவுசெய்த கரும்பு புற்கள், முழு கரும்பாக ஓராண்டில் வளர்ந்து முதிரும்.
கரும்பை வெட்டிய பிறகும், நிலம் மற்றும் நீர் வளத்தை பொறுத்து, சில ஆண்டுகளுக்கு, தொடர்ந்து முளைவிட்டு வளர்ச்சியடையும். அரவைக்காக வெட்டிய பின், தோகையை தீயிட்டு அழிப்பர்.
கடந்த ஆண்டு ஜனவரியில் புற்கள் முளைத்து, கரும்பு வளர்ந்து, தற்போது முதிர்ந்துள்ளன. அவற்றை அரவைக்காக ஆலைக்கு கொண்டு செல்ல, தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!