வரி பாக்கி செலுத்த அறிவிப்பு
திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
பேரூராட்சி பகுதிகளில், வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை, பேரூராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது.
நடப்பாண்டில், பலர் வரிகளை செலுத்தாமல், ஏராளமான தொகையை நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வரி பாக்கியை, வரும் 31ம் தேதிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு, பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துஉள்ளது.
இதற்காக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வாகனங்களில் ஒலிபெருக்கி பொருத்தி, வரியினங்களை செலுத்த வேண்டும் என, அறிவிப்பு செய்து வருகிறது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!