கண் மற்றும் பொதுநலம்: இலவச மருத்துவ முகாம்
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த பூண்டி கிராமத்தில், பாரத் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் பூண்டி ஜீவ வார்த்தை சபை இணைந்து, இலவச கண் மற்றும் பொதுநல மருத்துவ முகாம் நடந்தது.
இதில், ஊராட்சி தலைவர் தேன்மணி தலைமை வகித்தார்.
முகாமில், 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
கண்புரை, நீர் அழுத்தம், மாலைக்கண், நீர் வடிதல், துாரப் பார்வை, கிட்டப்பார்வை, பொது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
பங்கேற்றவர்களில், 19 பேர் மேல் சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!