ADVERTISEMENT
சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை இடையே, மேம்பால ரயில் பாதை உள்ளது. இதற்காக, 50 அடி இடைவெளியில், துாண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. துாண்கள் இடையே, 10 முதல் 50 அடி அகலம் வரை காலி இடம் உள்ளது.
அந்த வகையில், அடையாறு மண்டலத்தில், 550 மீட்டர் நீளம்; பெருங்குடி மண்டலத்தில், 550 மீட்டர் நீளம் மற்றும் ஆலந்துார் மண்டலத்தில், 400 மீட்டர் நீளத்தில் துாண்களை ஒட்டி காலி இடம் உள்ளது.
இந்த இடத்தை, ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கவும், சுகாதாரமாக வைத்திருக்கவும் பயனுள்ள வகையில் மாற்றி அழகுபடுத்த, மாநகராட்சி திட்டமிட்டது.
இதற்காக, இடத்தின் அகலத்தை பொறுத்து, நடைபயிற்சி பாதை, பூங்கா, நீரூற்று, ஓவியங்கள், வண்ண விளக்குகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கப்படுகிறது.
இதில், மாநகராட்சி நிதியில் இருந்து, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், 33 லட்சம் ரூபாயில் நடைபயிற்சி பாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்படுகிறது. அதேபோல், பெருங்குடி மண்டலம் சார்பில், 37 லட்சம் ரூபாயில் பூங்கா மற்றும் ஆலந்துார் மண்டலம் சார்பில், 10 லட்சம் ரூபாயில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
அடையாறு மண்டலத்தில், 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. பெருங்குடி, ஆலந்துார் மண்டலத்தில் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!