ADVERTISEMENT
கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது கிருஷ்ணா நகர். இங்கு, 30 வீடுகளுக்கு மேல் உள்ளது.
இங்குள்ள சாலைகள் படுமோசமாக உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல், இந்த சாலை சீரமைக்கப்படவில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் கூறியதாவது:
ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் ஏழாவது வார்டு பகுதியில், இதுவரை எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை.
குறிப்பாக, அடிப்படை வசதிகளான குடிநீர் பிரச்னை, கழிவு நீர் கால்வாய் பிரச்னை, சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம்.
தற்போது, இங்கு உள்ள கிருஷ்ணா நகர் சாலை, மிகவும் சேதமாகி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. இதை சீரமைத்து தர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!