செங்கை ரயில் நிலையத்தில் கூடுதல் கழிப்பறை அவசியம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையம், முக்கிய சந்திப்பாக உள்ளது. இங்கு, செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ளவர்கள், மின்சார ரயில்களில், சென்னை உட்பட பிற இடங்களுக்கு செல்கின்றனர். விரைவு ரயில்களில், தென் மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.
ரயில் நிலைய நடைமேடை வளாகத்தில், 5வது நடைமேடை பகுதியில், ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. இந்நிலையில், 5, 6வது நடைமேடைகளில், விரைவு ரயில்களும், எட்டாவது நடைமேடையில், மின்சார ரயில்களும் நின்று செல்கின்றன.
இங்கு, விரைவு ரயிலுக்காக காத்திருக்கும் முதியவர் மற்றும் பெண்கள், கழிப்பறைக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, எட்டாவது நடைமேடையில் கூடுதலாக ஒரு கழிப்பறை கட்டினால், முதியவர் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு வசதியாக இருக்கும் என, பொதுமக்கள் கருதுகின்றனர்.
எனவே, ரயில் நிர்வாகம் எட்டாவது நடைமேடை பகுதியில், விரைவு ரயிலுக்கு செல்லும் பயணியர் வசதிக்காக, கூடுதலாக கழிப்பறை கட்டித்தர வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!