ரேஷன் கடை துவங்க நகராட்சியில் தீர்மானம்
செங்கல்பட்டு: ஜே.சி.கே., நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், புதிய ரேஷன் கடை கட்ட, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு ஜே.சி.கே., நகரில், ரேஷன் கடை உள்ளது. இந்த கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என, மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 2021- - 22ம் ஆண்டு, செங்கல்பட்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் புதிய ரேஷன் கடை கட்ட ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன்பின், கடந்த பிப்., 16ம் தேதி, புதிய ரேஷன் கடை கட்ட 'டெண்டர்' விடப்பட்டது. இப்பணி துவங்க, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!