ADVERTISEMENT
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணப்பன் மகன் கோதண்டராமன், 40, ஆலத்துார் தனியார் நிறுவன வெல்டர்.
நேற்று காலை 11:30 மணிக்கு, வடகடம்பாடி பகுதி கடையில் குடிநீர் கேன் வாங்க, மூத்த மகன், ஹேமநாதனுடன், இருசக்கர வாகனத்தில் சென்றார்.
மகன், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்தார்.
மனை வளாக பகுதி குறுக்குத் தடத்தில் சென்றபோது, உயரத்தில் கடந்த, 11 கே.வி., உயரழுத்த மின் கம்பி, எதிர்பாராவிதமாக அறுந்து, அவர்கள் மீது விழுந்தது. இதில், உடலில் மின்சாரம் பாய்ந்து, அங்கேயே விழுந்து கிடந்தனர்.
அவ்வழியே சென்றவர்கள், அவர்கள் விழுந்து கிடந்ததை கண்டு, குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாமல்லபுரம், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக, டாக்டர் தெரிவித்தார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!