ADVERTISEMENT
வாலாஜாபாத்: வாலாஜாபாதில் இருந்து, ரயில் நிலையம் வழியாக ஒரகடம் செல்லும், ஆறு வழி சாலை உள்ளது. ஒரகடம் மார்க்கமாக மின் வாரிய மற்றும் பிற அரசு அலுவலகங்கள் உள்ளன. ஒரகடத்தில் இருந்து, காஞ்சிபுரம் மார்க்கமாக செல்லும் சாலை ஓரத்தில், உயர் அழுத்த மின் வழித்தடம் செல்கிறது.
இதில், மின் வழித்தடத்தில் செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கிறது. மின் வாரிய அலுவலகம் எதிரே செல்லும் ஆறுமுகப்பேட்டை தெருவில், கன ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றசாட்டு எழுந்துள்ளது.
இருப்பினும், வாகனப் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப, தாழ்வாக செல்லும் மின் கம்பியை இழுத்து கட்டும் விதமாக, கம்பால், முட்டு கொடுத்துள்ளனர். இந்த கம்பு விலகினால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சம்மந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மாற்று மின் கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!