ADVERTISEMENT
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி ஒலிமுகமதுபேட்டை பகுதியில், காஞ்சிபுரம் -வேலுார் - அரக்கோணம் ஆகிய மூன்று பகுதிக்கு செல்லும் பிரதான சந்திப்பு சாலைகள் உள்ளன.
மார்ச் மாதம் துவக்கத்தில், ஒலிமுகமதுபேட்டை பகுதியில், பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக, கழிவு நீர் சாலையில் தேங்கி, குளம் போல் இருந்தது.
இதனால், சாலையில் நடந்து செல்வோர், தேங்கியுள்ள கழிவு நீரில் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் டீசல் இயந்திரத்தின் மூலமாக, சாலையில் தேங்கிய கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், நேற்று ஒலிமுகமதுபேட்டை சாலையில், கழிவு நீர் குளம் போல் தேங்கி நின்றது.
இதனால், ஒலிமுகமதுபேட்டை பகுதியை, கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் முகம் சுளிக்க வேண்டி உள்ளது.
எனவே, ஒலிமுகமதுபேட்டை பகுதியில் தேங்கி இருக்கும் கழிவு நீரை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஒலிமுகமதுபேட்டை பகுதியைச்சேர்ந்த மக்கள் கூறியதாவது:
சாலை இரு புறமும், மழை நீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தும் பணி, இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது.
இதனால், சாலையில் கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. கழிவு நீர் தடையின்றி வெளியேற, வடிகால்வாய் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!