ADVERTISEMENT
கோவில் வளாகத்தில்
தரைவிரிப்பு அவசியம்
வாலாஜாபாத் அடுத்த, திருமுக்கூடல் கிராமத்தில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், அப்பன் வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, திருமுக்கூடல், பழையசீவரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நுற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவில் நுழைவாயில் முதல், கருவறை மண்டபம் வரையில், 200 மீட்டருக்கு மேல், திறந்த வெளியாக இருக்கிறது. இந்த இடைவெளி முழுதும், நடந்து செல்வதற்கு ஏற்ப, வெள்ளை பாறாங்கற்களை தரையில் பரப்பி உள்ளனர்.
கோடை வெயிலுக்கு, வெள்ளை பாறங்கற்கள் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால், பக்தர்கள், சூடு தாங்க முடியாமல், புல் வெளி பகுதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்க, அப்பன் வெங்கடேசப்பெருமாள் கோவில் வளாக நடைபாதையில், தரைவிரிப்பான் அமைக்கவேண்டும்.
- பக்தர்கள், திருமுக்கூடல்.
உயர்கோபுர மின் விளக்கு
எரிய நடவடிக்கை தேவை
சின்ன காஞ்சிபுரம் 'டோல்கேட்' பகுதி சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. காஞ்சிபுரம் மின் ஊழியர்களிடம் தெரிவித்து விட்டோம். எந்த வித நடவடிக்கையும் இல்லை.
இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமாக உள்ளது. உயர்கோபுர மின் விளக்கு பராமரிப்பாளர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம். எஸ். குமார், சின்ன காஞ்சிபுரம்.
கீழம்பி புறவழிச்சாலையை
சீரமைக்க வேண்டும்
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் இருந்து கீழம்பி வரை செல்லும் புறவழிச்சாலை பல இடங்களில் சேதம் அடைந்து பள்ளங்கள் காணப்படுகின்றன.
அந்த சாலையில் நுாற்றுக்கணக்கான கல்குவாரி லாரிகள் செல்கின்றன. இவை அதிகமக பாரங்கள் ஏற்றி செல்வதால் சாலை அதிகமாக சேதமடைகிறது. பழுதான கீழம்பி புறவழிச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி. நல்லதம்பி, காஞ்சிபுரம்.
வேகத்தடையில்
வெள்ளை கோடு அவசியம்
உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் சாலை, கார், வேன், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக உள்ளது. இந்த சாலையில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் உள்ளன.
இதில், பல இடங்களில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை நிற கோடு மற்றும் இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் அட்டைகள் இல்லாததால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வேகத்தடைகளின் மீது வெள்ளை 'பெயின்ட்' அடிக்கவும், இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்கவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சார், திருப்பூர் வளர்மதிலிருந்து பாவா மெடிக்கல் சிக்னல் வரை அந்த ஒருத்தில் வாகனங்களை (கார்) நிறுத்திவைக்கிறார்கள், சிக்னல் திறந்தவுடன் மக்கள் அந்த வழியே வருபவர்களுக்கு இடையூறாக இருக்கிறது, ஒரு பக்கம் கார், இந்த பக்கம் சிக்னல் ஓபன் ஆனவுடன் பைக் எப்படி மக்கள் நடக்க முடியும், காவல் துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. நான் ஒரு போலீஸ் அதிகரிடம் புகார் செய்தேன், நீங்கள் இதை சரி செய்யவில்லை என்றால், பேப்பரில் புகார் செய்வேன் என்று சொன்னேன் அதற்க்கு அந்த போலீஸ் அதிகாரி பண்ணுங்க சார் என்று சொல்லுகிறார். அவருக்கு என் உயிர் பற்றி கவலை இல்லை, இதே அவர் குடும்பத்தில் உள்ள ஒரு நபர் எப்படி சொல்லி இருந்தால் என்ன செய்து இருப்பார் சொல்லுங்கள். ஒரு பொறுப்பு உள்ள அதிகாரியா அவர் பேசவில்லை. சிக்னல்-லில் லைசென்ஸ் இல்லை ,அதிவேகம், இன்சூரன்ஸ் இல்லை என்று பிடிப்பைதை விட்டுவிட்டு வளர்மதிலிருந்து பாவா மெடிக்கல் சிக்னல் வரை அந்த ஒருத்தில் வாகனங்களை (கார்) நிறுத்திவைக்கிறார்கள் அவர்களை பிடியுங்கள். ஏன் சார், அவர்களை பிடிக்க உங்களுக்கு பயமா சார். என் உயிர்இருக்கு எதாவது ஆனா தான் நீங்கள் ஆக்ஷன் எடுப்பிங்களா சார். நான் போலீசை குறை சொல்லுவதாக நினைக்கவேண்டாம். நன்றி