ADVERTISEMENT
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சாலை தெருவில் சங்கரமடம் அருகில் போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்த பழய பயணியர் நிழற்குடை மற்றும் அங்கிருந்த கடை ஆகியவற்றை கடந்த மாதம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
தற்போது அந்த இடத்தில் வழக்கம் போல் வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடம் அருகில், பயன்பாட்டில் இல்லாத பழய பயணியர் நிழற்குடையில் ஆக்கிரமிப்பு கடை இருந்தது.
மேலும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் கடந்த மாதம் அந்த கட்டடத்தை அகற்றினர்.
அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருந்து வந்தது.
மேலும் பிரதான சாலை என்பதால் வேலுார், திருத்தணி, அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் அந்த சாலை வழியாகத்தான் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் செல்லும்.
மேலும் சில நேரங்களில் ஆட்டோக்கள், பயணியர் வேன்களை சங்கர மடம் வெளியில் நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பயணியரை ஏற்றி செல்வதற்கு வேறு இடத்தில் வாகனங்களை நிறுத்தினால் அந்த இடத்தில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கலாம்.
அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!