ஓ.டி.டி., தளங்கள் மீது நடவடிக்கை : அனுராக் தாக்கூர் ‛பளீச்
புதுடில்லி :‛‛ஓ.டி.டி., தளங்களில், ஆபாசத்தையும், துஷ்பிரயோகத்தையும் தடுக்க, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், அனுராக் தாக்கூர், இன்று (மார்ச்., 19)ம் தேதி, சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது:
படைப்பாற்றல் என்ற பெயரில், தவறான மொழி மற்றும் நாகரீகமற்ற நடத்தையை பொறுத்துக்கொள்ள முடியாது. ஓ.டி.டி., தளங்களில், அதிகரித்து வரும், ஆபாசமான உள்ளடக்கங்கள் குறித்து, அரசுக்கு வரும் புகார்கள், தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
ஓ.டி.டி., தளங்களில், முதல் நிலையில் தயாரிப்பாளர்களே, புகார்களை களைய முன்வர வேண்டும். ஏறக்குறைய, 90 சதவீத புகார்களுக்கு, முதல் கட்டத்திலேயே தீர்வு காணப்படுகின்றன. அடுத்தகட்டமாக, ஒட்டுமொத்த படக்குழு தரப்பில் இருந்தும், புகார்கள் களையப்பட வேண்டும். இதையும் மீறி, புகார்கள் அரசின் கவனத்துக்கு வந்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும், சில நாட்களாக புகார்கள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக, சட்ட விதிகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் கூட, அதில் இருந்தும், பின்வாங்க மாட்டோம். ஆபாசத்தையும் துஷ்பிரயோகத்தையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், அனுராக் தாக்கூர், இன்று (மார்ச்., 19)ம் தேதி, சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது:
படைப்பாற்றல் என்ற பெயரில், தவறான மொழி மற்றும் நாகரீகமற்ற நடத்தையை பொறுத்துக்கொள்ள முடியாது. ஓ.டி.டி., தளங்களில், அதிகரித்து வரும், ஆபாசமான உள்ளடக்கங்கள் குறித்து, அரசுக்கு வரும் புகார்கள், தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக, சட்ட விதிகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் கூட, அதில் இருந்தும், பின்வாங்க மாட்டோம். ஆபாசத்தையும் துஷ்பிரயோகத்தையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
Naalu cenema kaaranungala Thookula pottaa yellaam automatic ka thirunthiduvaanunga...