Load Image
Advertisement

வட்டார வழக்குச்சொல் ஆவணமே இளையதலைமுறையினருக்கான சொத்தாகும்...கவிஞர் பேரா பேச்சு

Tamil News
ADVERTISEMENT

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் 19.03.2023 ஆம் நாள் வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாக்க திருநெல்வேலி மண்டலக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் ஆரவ்வாய்மொழியிலுள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் தி.பால சுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். சாகித்ய அகாடமி விருதாளர் பொன்னீலன் முன்னிலையுரை ஆற்றினார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்குநர் முனைவர். கோ.விசயராகவன் நோக்கவுரை ஆற்றினார்.முதலாவதாக திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா உரையாற்றினார்.

அவரது உரையில்,"ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ்மொழி என்பதில் மட்டும் இருப்பதல்ல மொழியின் பெருமை. மொழியின் வழக்கியல்,சொற்களின் களஞ்சியம் உட்பட பல தன்மைகளிலும் பெருமை அடங்கியுள்ளது. அதனால்தான் நமது வட்டார வழக்குச் சொற்களைக் காப்பதும் ஆவணப்படுத்துவதும் அவசியமாகும். இந்த ஆவணமே வருங்கால நம் இளையதலைமுறையினருக்காக நாம் சேர்த்து வைக்கும் சொத்தாகும்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் எண்ணற்ற திட்டங்களுள் ஒன்றுதான் இந்த வட்டார வழக்குச் சொல்லதிகார உருவாக்கத் திட்டமாகும்.

தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககம் மூலமாக இந்தப் பணி நடைபெற்று வருவது மகிழ்ச்சியே. இப்பணிகள் சிறக்க தமிழ்ச் சான்றோர்களும்,தமிழ் அமைப்புகளும் இணைந்து பணியாற்றணும்".....என கவிஞர் பேரா தனதுரையில் குறிப்பிட்டார்.


தொடர்ந்து காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சத்திய மூர்த்தி,எழுத்தாளர் குமரி ஆதவன்,எழுத்தாளர் பிரியதர்சினி ஆகிய தமிழறிஞர்கள் உரையாற்றினர். தொகுப்பாளர் வே.பிரபு நன்றியுரையாற்றினார்.


இயக்ககப் பதிப்பாசிரியர் கி. தமிழ்மணி ,அறிஞர் அண்ணா கல்லூரி செயலாளர் மருத்துவர் மனகாவலம் பெருமாள்,முனைவர் நீலகண்ட பிள்ளை,குமரி மாவட்ட கவிதை உறவு அமைப்பாளர் சிதம்பர நடராஜன், நாவலாசிரியர் மலர்வதி,நெய்தல் படைப்பாளி பெர்லின்,பதிப்பாசிரியர் வீர பாலன் உட்பட பல தமிழறிஞர்களும் ,கல்லூரி மாணவிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up