Load Image
Advertisement

இளம் வயதினர் மாரடைப்பு: மரண எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி: கடந்த 45 நாளில் மாரடைப்பால் மரணடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது
Latest Tamil News

கிரிக்கெட் விளையாட்டின் மீது இளைஞர்கள் நாடு முழுவதும் மோகம் கொண்டுள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் வீதி மற்றும் மைதானங்களில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இதற்கு நேரம் காலம் என வித்தியாசம் இல்லாமல் பகல் இரவு நேர ஆட்டங்களாக விளையாடி வருகின்றனர்.

அதே நேரத்தில் பந்து வீச்சில் எதிர் அணியை சுருட்டி விடும் அளவிற்கு விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த பிப்., மாதத்தில் தெலங்கானா மாநிலம் நான்டெட்டில் விளையாடிக்கொண்டிருந்த 25 வயது இளைஞர் மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். தொடர்ந்து ஹை தராபாத்தில் உடற்பயிற்சி ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் மாரடைப்பால் இறந்தார்.
Latest Tamil News மேலும் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜிஎஸ்டி அணிக்கும் மாவட்ட பஞ்சாயத்து ஊழியர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது ஜிஎஸ்டி அணியை சேர்ந்த வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார்.

இந்நிலையில் இன்று( 19 ம் தேதி) குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது 45 வயது நபர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இளம் வயதினர் கடந்த 45 நாட்களில் மாரடைப்பு காரணமாக 8 பேர் மரணம் அடைந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.


வாசகர் கருத்து (4)

  • எத்திராஜ் - மாங்குடி,இந்தியா

    மிகவும் கவலை கொள்ளவைக்கும் செய்தி. மத்திய, மாநில அரசுகள் இதற்கான காரணத்தை சுகாதாரத்துறை மூலமாக ஆராய்ந்து, சரியான காரணத்தைக் கண்டுபிடித்து, இம்மாதிரி அகால மரணங்களைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

  • Anand - Toronto,கனடா

    மிக எளிதான CPR மூலம் உயிரை காப்பாற்ற முடியும். I இதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • Asagh busagh - Munich,ஜெர்மனி

    இந்திய நாட்டின் உணவு முறை விவாசாயம் சார்ந்த கடந்த கால வாழ்வுமுறைக்கு ஏற்றது போல இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்றது இல்லை. அதுமட்டுமில்லாம இப்போ கெட்ட கொழுப்பு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கபட்ட சர்க்கரையும் சேர்ந்துவிட்டது. வளர்ந்த நாடுகளில் குண்டா இருந்தா தொன்னுறு சதவிகிதம் கஷ்டத்தில் இருப்பவர்களாக அர்த்தம். நம்ம ஊரில் நிலைமை தலைகீழ். இப்போ சிகின்னி பேஃட் பிரச்சினை ஒல்லியானவர்களையும் விடவில்லை. தின்னே செத்தவன் நாடாகி விட்டது

  • g.s,rajan - chennai ,இந்தியா

    கிரிக்கெட் விளையாட்டு நேரத்தையும் காலி பண்ணுது. ஆளையும் காலி பண்ணுது ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்