ADVERTISEMENT
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி.,யின் முதலீடு குறித்து பாலிசிதாரர்களோ பங்குதாரர்களோ பயப்பட தேவையில்லை. அது கடலில் ஒரு துளி போன்றது என எல்.ஐ.சி., தலைவர் குமார் கூறினார்.
உச்சத்தில் இருந்த அதானி குழுமப் பங்குகள் ஜனவரி இறுதியில் இருந்து கடும் சரிவைச் சந்தித்தன. அக்குழுமம் பற்றி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் எதிர்மறையான செய்தி வெளியிட்டது. இதனால் பல முதலீட்டாளர்கள் அதானி குழுமப் பங்குகளை விற்று வெளியேறினர். அப்போது எல்.ஐ.சி., அதானி குழுமத்தில் முதலீடு செய்து நஷ்டமடைந்ததாக புரளி கிளம்பியது. எல்.ஐ.சி., மிக மிகக் குறைந்த விலையில் அதானி குழுமப் பங்குகளை வாங்கி பெருத்த லாபம் பார்த்துள்ளது. தற்போதும் நஷ்டமின்றி போர்ட்போலியோவை நிர்வகித்துள்ளது.
இந்நிலையில் வர்த்தக பத்திரிகை ஒன்றுக்கு எல்.ஐ.சி., தலைவர் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: காப்பீட்டுச் சந்தை, எதிர்காலத்தில், வரிச் சுமையிலிருந்து விடுபடும். காப்பீட்டிற்கான வரி விலக்கு புதிய வரி விதிப்பு முறையில் கிடையாது. இன்றைய இளைய தலைமுறையினரும் காப்பீடை ஒரு பாதுகாப்பாக தான் கருதுகிறார்கள். மற்ற நிதி திட்டங்களில் சேர்வதற்கு முன் காப்பீடை பெறுகின்றனர். இனி வரி கட்டாமல் இருக்க இன்சூரன்ஸ் வாங்க வேண்டும் என்று மக்களிடம் சொல்லத் தேவையில்லை. இன்சூரன்ஸ் தேவை என்பதால் அதை வாங்க வேண்டும் என சொல்லலாம். தற்போது இன்சூரன்ஸ் தேவை அடிப்படையிலான விற்பனை. காப்பீடு நோக்கத்திற்காக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாலிசிகளை வாங்க வேண்டும் என முயற்ச்சிக்கிறோம்.
அதானி குழுமத்தில் உள்ள எல்.ஐ.சி.,யின் பணம் பற்றி பங்குதாரர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் கவலைப்பட தேவையில்லை, ஏனெனில் 1 சதவீதம் கூட ஆபத்து இல்லை. அது ஒரு பெரிய விஷயமில்லை. இது கடலில் ஒரு துளி போன்றது. இவ்வாறு கூறினார்.
உச்சத்தில் இருந்த அதானி குழுமப் பங்குகள் ஜனவரி இறுதியில் இருந்து கடும் சரிவைச் சந்தித்தன. அக்குழுமம் பற்றி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் எதிர்மறையான செய்தி வெளியிட்டது. இதனால் பல முதலீட்டாளர்கள் அதானி குழுமப் பங்குகளை விற்று வெளியேறினர். அப்போது எல்.ஐ.சி., அதானி குழுமத்தில் முதலீடு செய்து நஷ்டமடைந்ததாக புரளி கிளம்பியது. எல்.ஐ.சி., மிக மிகக் குறைந்த விலையில் அதானி குழுமப் பங்குகளை வாங்கி பெருத்த லாபம் பார்த்துள்ளது. தற்போதும் நஷ்டமின்றி போர்ட்போலியோவை நிர்வகித்துள்ளது.

அதானி குழுமத்தில் உள்ள எல்.ஐ.சி.,யின் பணம் பற்றி பங்குதாரர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் கவலைப்பட தேவையில்லை, ஏனெனில் 1 சதவீதம் கூட ஆபத்து இல்லை. அது ஒரு பெரிய விஷயமில்லை. இது கடலில் ஒரு துளி போன்றது. இவ்வாறு கூறினார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!