Load Image
Advertisement

நிரவ் மோடி நிறுவனத்தின் பேங்க் பேலன்ஸ் 236 ரூபாய் மட்டுமே!

Tamil News
ADVERTISEMENT
ஒரு காலத்தில் பிரபல கோடீஸ்வரராக இருந்த நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டு சிக்கினார். அவரது நிறுவன வங்கிக் கணக்கில் தற்போது வெறும் 236 ரூபாய் மட்டுமே உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

குஜராத்தை பூர்விகமாக கொண்ட நீரவ் மோடி 2018-க்கு முன்பு வரை வைர தொழிலில் கொடி கட்டி பறந்தவர். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்து லண்டன் தப்பிச் சென்றார். இன்டர்போல் உதவியுடன் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தும் வழக்கு நடைபெற்று வருகிறது. அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய தகவல்களின்படி, நிரவ் மோடியின் நிறுவனமான பையர்ஸ்டார் டைமன்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வெறும் ரூ.236 மட்டுமே உள்ளது. ரூ.2.46 கோடி இருந்தது. வருமான வரி பாக்கிகளுக்காக அத்தொகையை கோடக் மஹிந்திரா வங்கி எஸ்.பி.ஐ.,க்கு மாற்றியதால் தற்போது ரூ.236 மட்டுமே உள்ளது. இது தவிர நிறுவனத்திற்கு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகியவற்றில் கணக்கு உள்ளது.
Latest Tamil News இந்த வங்கிகளில் இருக்கும் தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மூன்று மாதங்களுக்குள் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இரு வங்கிகளும் உத்தரவுகளை நிறைவேற்றவில்லை. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கணக்கில் இருந்து ரூ.17 கோடி மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. மீதத் தொகையை மாற்றுமாறு பணத்தை பெறுவதற்கு நியமிக்கப்பட்ட அதிகாரி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதற்கு வங்கி தரப்பு பதிலளிக்கவில்லை.

கடந்த வாரம் நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டச் செலவுகளுக்காக ரூ.1.5 கோடி செலுத்த நீரவ் மோடிக்கு உத்தரவிட்டனர். அதற்கு தனது சொத்துக்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுவிட்டதால் போதிய பண ஆதாரமில்லை, மாதம் ரூ.10 லட்சம் கடன் வாங்குவதாக தெரிவித்திருந்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement