Load Image
Advertisement

"கிளீன் பாலிடிக்ஸ் வேண்டும்"- அண்ணாமலை

Tamil News
ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காத, தேர்தலில் பணம் செலவழிக்காத ஒரு தூய்மையான அரசியல் பாதையை நோக்கி நான் பயணித்து கொண்டிருக்கிறேன். இதற்கு தமிழக மக்களும் தயாராகிவிட்டதாக நானும் உணர்கிறேன் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் வரும் போது விரிவாக பேசுகிறேன். கட்சிக்குள் சில கருத்துகள், பேசிய கருத்து மீடியாவில் விவாதம் நடக்கிறது.

கட்சியின் தலைவனாக இருந்தாலும், தமிழகத்தில் ' கிளீன் பாலிடிக்ஸ்க்கான நேரம் வந்துவிட்டதாக நம்புகிறேன். அந்த 'கிளீன் பாலிடிக்ஸ்' அச்சாரம் என்பது பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திப்பது தான். பணம் கொடுத்து எந்த தேர்தலை யார் சந்தித்தாலும், நாங்கள் உன்னதமான அரசியலை செய்கிறோம் .

தமிழக அரசியல் களத்தில் பணம் இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்ற அளவுக்கு அரசியல் வந்துள்ளது. அதில் ஒரு தரம் மட்டும் மாறிவிட்டது. ஆளுங்கட்சியாக இருந்தால் இவ்வளவு, எதிர்க்கட்சியாக இருந்தால் கொஞ்சம் குறைச்சு கொடுத்ததால் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்ற அளவுக்கு அரசியல் மாறியிருச்சு. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. தனிமனினாகவும், பா.ஜ.,வின் தொண்டனாகவும், மாநில தலைவராகவும் அதேபோன்ற தேர்தலை சந்திப்பதில் உடன்பாடு இல்லை.


Latest Tamil News

அதேநேரத்தில் அரசியல் மாற்றம் எனக்கூறும்போது, அரசியலை முன்னெடுக்கும் போது எடுக்கும் உத்திகள், பிரசாரத்தில் சந்திக்கும் போது எடுக்கும் உத்திகள், மக்களை சந்திக்கும்போது உத்திகள் 'கிளீன்' ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த கட்சியால் 'கிளீன் பாலிடிக்ஸ்' கொடுக்க முடியும் என மக்களுக்கு அந்த நம்பிக்கைய கொடுக்கணும்.

அதனால்,சில கருத்துகளை தலைவர்களிடம் பகிர்ந்துள்ளேன். அதில் உறுதியாக உள்ளேன். அதில் மாற்றுக்கருத்து இல்லை. எந்த கட்சிக்கும் எதிராகவும் இல்லை. எல்லா கட்சிகளும் அவரவர் பயணத்தில் அவர்களுக்கு சரி என எதை நினைக்கிறார்களோ, அதில் அரசியல் செய்கிறார்கள். அவுங்க அரசியல் நிலைப்பாடு செய்வது தவறு என சொல்லும் அதிகாரம் எனக்கு இல்லை. அந்த மாதிரி அரசியல் செய்யக்கூடாது. அந்த மாதிரி செய்யணும்னு சொல்ற அதிகாரமும் எனக்கு கிடையாது.


கடன்காரன் ஆகிட்டேன் !

அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு நான் தற்போது கடன்காரனாக உள்ளேன். காவல் அதிகாரியாக இருந்து சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணம் காலியாகி விட்டது. பணம் கொடுத்து தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. மற்ற கட்சிகள் காசு கொடுக்கலாம், இதனை நான் வெளிப்படையாக சொல்ல மாட்டேன். தமிழகத்தில் மக்கள் மாற்றத்திற்கு வந்து விட்டனர் என்பது எனது ஆழ் மனதிற்கு தெரிகிறது.



இந்த காலகட்டத்தில் 2 ஆண்டு பாஜ., மாநில தலைவராக பதவி வகித்த பிறகு, தமிழக அரசியலை உற்று நோக்கிய பிறகு, தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பயணம் செய்துள்ளேன். காரில் இருந்து நடந்து போயிருக்கிறேன். நான் உறுதியாக நம்புகிறேன். அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு , நேர்மையான அரசியலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்காத அரசியலுக்கு மக்கள் காத்திருக்கின்றார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி நேர்மையான முறையில் மக்களிடம் முறையிட்டு, அவர்களின் வாக்குகளை பெறுவதற்கு நேரம் வந்துவிட்டது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு.

நான் ஏற்கனவே சொன்னது போல இந்த கட்சி கூட்டணி, அந்த கட்சி கூட்டணி என பேசுகிற ஆள் நான் கிடையாது. நான் பேசுகின்ற அதிகாரமும் இந்த நேரத்தில் எனக்கு இல்லை. வெகுவிரைவில் பேசுகிறேன். பா.ஜ., காரனாக பேசுகிறேன். ஆனால், உறுதியாக தெளிவாக இருக்கிறேன். இப்படிப்பட்ட அரசியல் முன்னெடுப்பில் மட்டும் தான் என்னை இணைத்து கொள்ள வேண்டும் என்பதில். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் உறுதியாக இருக்கிறேன்.

தமிழகத்தில் மாற்றம்




நான் அரசியலுக்கு வந்த காலத்தில் அரவக்குறிச்சியில் நானும் போட்டி போட்டிருக்கேன். அரசியல்ல என்ன நடக்கும்னு தெரியாத நேரம் அது. அரசியல் உத்திகள் என்னனு தெரியாத நேரம். ஆனா இன்னைக்கு 2 வருஷம் முடிந்த பிறகு மனசை ஒருமுகப்படுத்தி கொண்டு வந்துட்டேன்.

அரசியல் என்பது நேர்மையாக, நாணயமாக, பணம் இல்லாத அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லாட்டி, தமிழகத்தில் மாற்றம் என்பது ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நடக்காது என்ற எண்ணோட்டத்திற்கு வந்துட்டேன். அதை என்னுடைய கட்சிக்குள்ளே பேச ஆரம்பிச்சிருக்கிறேன். தலைவர்கள், தெண்டர்களிடம் பேச ஆரம்பிச்சிருக்கிறேன். வரும் வருஷங்களில் இன்னும் ஆக்ரோஷமாக பேசுவேன்.

கூட்டணி பற்றி அதற்கான நேரம் வரும் போது எங்கள் தலைவர்கள் சொல்வார்கள். மறுபடியம் நான் சொல்கின்றேன் எந்த கட்சிக்கும் எதிரி கிடையாது. யாருக்கும் எதிரி கிடையாது எந்த தலைவருக்கும் எதிரி கிடையாது.

என்னுடைய மனசுல நான் ஒரு வேலைய விட்டுவிட்டு உங்களை போல் மாற்றத்தை கொடுக்க வேண்டும் என வந்து சில தவறுகளை செய்வதற்கு தயாராக இல்லை. அந்த அடிப்படையில் சில வார்த்தைகளை அன்று பேசியிருந்தேன். நேரம் வரும் போது இன்னும் விவரமாக தீர்க்கமாக சொல்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.



வாசகர் கருத்து (74)

  • KUMAR. S - GUJARAT ,இந்தியா

    க்ளீன் பாலிடிக்சா ..எந்த கட்சியில் இருந்துகிட்டு இதை பத்தி பேசுறீங்க..

  • g.s,rajan - chennai ,இந்தியா

    மோடி மிஸ்டர் க்ளீனாக இருக்கலாம் ,ஆனா மத்தவங்க ...???

  • Sureshkumar - Coimbatore,இந்தியா

    திரு அண்ணாமலை அவர்களே, திமுக அண்ட் அதிமுக கட்சிக்கு மாற்றாக உங்களை பார்க்கிறேன், இலவசங்கள் அளிக்காத ஆட்சியை விரும்புகிறோம் . உங்களால் முடியும், அனால் பொறுத்து இருந்து இரு திராவிட கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை மிஞ்சும் அளவுக்கு தொலைநோக்கு பார்வையுள்ள நல்ல திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடிக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், மேலும், ஊழலற்ற மற்றும் திறமையான , பெண்களுக்கு பாதுகாவல் அளிக்கும் ஆட்சி நடைபெற ]வாழ்த்துக்கள், ஜெய் ஹிந்த் .

  • SOLAIRAJA - CHENNAI,இந்தியா

    திரு அண்ணாமலை அவர்களே நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழ் நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளை மீறி ஒரு கட்சியை வளர்த்து தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்பது மிக மிக சவாலான விஷயம். அதாவது மூன்றாவதாக ஒரு கட்சி வளர ஆரம்பித்தால் இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்று சேர்ந்து அந்த மூன்றாவது கட்சியை ஆட்டம் காண வைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே எடுப்பார்கள் அதில் இது வரை வெற்றியும் பெற்றுள்ளார்கள். உங்களின் தைரியமான துணிச்சலான நடவடிக்கைகளினால் தமிழ் நாட்டில் இப்போது ஊழல் செய்ய பயப்படுகிறார்கள். தமிழக பாரதிய ஜனதா கட்சியை எப்படியாவது வளர்த்து தமிழ் நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சியில் அமர்த்த நீங்கள் அரும்பாடு படுகிறீர்கள். உங்களுக்கு நடு நிலை வாக்காளர்கள் மற்றும் தற்போதைய அரசியலை வெறுத்து வோட்டு போட வராத வாக்காளர்களின் ஆதரவு மற்றும் தங்கள் கட்சியின் ஓட்டும் உள்ளது. தங்கள் முயற்சிக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும். ஆனால் அதற்க்கு உங்கள் கட்சியில் உள்ள அணைத்து நிர்வாகிகள் உங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும், மற்றும் டில்லியில் இருந்தும் கிறீன் சிக்னல் கிடைக்க வேண்டும். தற்போதைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகிய நீங்கள் ஒளிர்ந்து தமிழக அரசியலில் வளர்ந்து நேர்மையான ஆட்சியை கொடுப்பது எல்லாம் வல்ல இறைவனின் கைகளில் தான் உள்ளது. நன்றி.

  • venugopal s -

    திமுக அதிமுக கட்சிகள் சில்லறை வியாபாரிகள், பணம் கொடுத்து வாக்காளர்களிடம் இருந்து ஓட்டுக்களை வாங்குகிறார்கள். பாஜக மொத்த ஹோல்சேல் வியாபாரி, வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்களையே விலைக்கு வாங்குகிறார்கள்.இதில் நேர்மையாம், புண்ணாக்காம்!

    • Nicolethomson - Chikkanayakkanahalli, Bengaluru Tumakuru dt

      கடற்கரையில் ஏர்கூலர் வைத்த உத்தமனை கடவுளாக நினைக்கும் உன்னை போன்றோருக்கு ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்