Load Image
Advertisement

ராகுல் வீட்டில் டில்லி போலீஸ்: பாலியல் குறித்து சர்ச்சை பேச்சு தொடர்பாக விசாரணை

புதுடில்லி: ராகுல் வீட்டிற்கு வந்த டில்லி போலீசார் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, பாலியல் குறித்து அவர் பேசிய கருத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

Latest Tamil News


ராகுல் நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரையின் போது, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் ஒருவர் தன்னிடம் வந்து பேசி, பல விபரங்களை தெரிவித்ததாக ராகுல் காஷ்மீரில் பேசினார். பாதிக்கப்பட்ட பெண் குறித்த விபரங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி ராகுலுக்கு டில்லி போலீசார் 'நோட்டீஸ்' அளித்தனர்.

இதற்கு ராகுல் பதில் அளிக்காத நிலையில், தற்போது அவரது இல்லத்திற்கே நேரில் சென்று, டில்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையறிந்த, காங்., தொண்டர்கள் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் காங்., தொண்டருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Latest Tamil News

டில்லி போலீஸ் சட்ட ஒழுங்கு சிறப்பு கமிஷனர் பீர் ஹூடா கூறுகையில், மார்ச் 15ம் தேதி அன்றே ராகுலை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் எங்களை அவர் சந்திக்கவில்லை. பதில் தராததால், நேரில் வந்து அவரிடம் விசாரிக்கிறோம். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை கேட்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Latest Tamil News
இது குறித்து காங்., சார்பில் வெளியிட்ட அறிக்கை: யாத்திரை முடிந்து 45 நாள் கழித்து ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். ஜனநாயகம், பெண்கள் மேம்பாடு, கருத்து சுதந்திரம், எதிர்க்கட்சி ஆகியவற்றை பலவீனமாக்கவே அரசு இதை செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.


வாசகர் கருத்து (19)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் ஒருவர் தன்னிடம் வந்து பேசி, பல விபரங்களை தெரிவித்ததாக ராகுல் காஷ்மீரில் கூறியதால் போலீசு புலன் விசாரணையை தொடங்கியுள்ளார்கள் இதில் என்ன தவறு உள்ளது. நுணலும் தனது வாயால் கெடும் என்பது போல ராகுல் சொன்னது உண்மையான தகவல்களை அதனுடைய விவரங்கள் என்ன என்று அவைகளை சேகரித்து அரசாங்கம் தக்க நடாவடிக்கைகளை எடுக்கும் இல்லாவிடில் ராகுல் நான் பேசிய பேச்சை அரசாங்கம் சட்டையே செய்ய வில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏளனம் செய்வார் இதில் என்ன தவறு உள்ளது

  • Raj -

    .ராகுலுக்கும் ட்ரம்புக்கும் ஒரு ஒற்றுமை இங்கே பாரத் ஜோடோ என்றும் இந்தியாவை மீட்க வேண்டும் என்றும் கூறுவதை அங்கே USA pup டிரம்ப் அமெரிக்காவை மீட்டு எடுப்பேன் என்று கூறுகிறார் ஆக என்ன பொருத்தம்.

  • rama adhavan - chennai,இந்தியா

    அப்போ ஒரு கொலை கேஸ், கொள்ளை கேஸ், ஊழல் கேஸ், லஞ்ச கேஸ்,MLA, MP க்கு எதிரான ஊழல் கேஸ் எல்லாம் 10 ஆண்டு 20 ஆண்டு நடக்கிறது. அவை எல்லாம் காங்கிரஸ் கூற்றுப்படி ஜனநாயகத்துக்கு எதிரா?

  • M Ramachandran - Chennai,இந்தியா

    என்றைக்கு உஉஉலக்கை நாயகன் ராவுலய் சென்று (யாருக்காகவோ) பார்த்தாறோ ( நடித்தாரோ) அன்று பிடித்த சனி ராவுளுக்கு நன்ஙகு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது

  • sridhar - Chennai,இந்தியா

    பி எம்மாக அல்ல , ஒரு எம்பியாக கூட இவரை நினைத்து பார்க்க முடியவில்லை , ரொம்ப இம்மெசுர் . மனம் வளர வில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up