Load Image
Advertisement

வடமாநிலத்தவர் குறித்து அவதூறு: பீஹார் வாலிபர் கைது

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்: வடமாநிலத்தவர் குறித்து அவதுாறு பரப்பிய வாலிபரை பீஹாரில் திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்களை திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்களை பிடிக்க தனிப்படையினர் பீஹார், ஜார்கண்ட் மாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான தனிப்படையினர் கடந்த ஒரு வாரமாக பீஹாரில் முகாமிட்டு வதந்தி பரப்பிய நபரை தேடினர். அதில், திருப்பூரில் இருந்து பீஹாருக்கு சென்று, அங்கிருந்து வதந்தியை பரப்பிய, பீஹாரை சேர்ந்த உபேந்தர் ஷேனி, 32 என்பவரை தனிப்படையினர் இன்று(மார்ச் 19) கைது செய்தனர். அம்மாநில கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருப்பூருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


வாசகர் கருத்து (3)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ....

  • N SASIKUMAR YADHAV -

    கைதுசெய்ய பீகார் குஜராத் போன்ற வெளிமாநிலங்களுக்கு செல்லும் காவல்துறை உள்ளூரில் இருப்பவர்களை விட்டு விடுகிறது

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    போலீஸ் கார், ஹிந்தி வேணாம் poda, பீடா வாயன், வடக்கன் இப்படி எல்லாம் சொன்ன நல்லவங்கள எப்போ கைது பண்ண போறீங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement