Load Image
Advertisement

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இடமில்லை: ராகுலுக்கு நட்டா எச்சரிக்கை


புதுடில்லி: ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இடமில்லை என ராகுலை பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கடுமையாக சாடி பேசியுள்ளார்.

Latest Tamil News

பா.ஜ., யுவ மோர்ச்சா நிகழ்ச்சியில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் தேசத்தின் இளைஞர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் அரசியல் கலாசாரத்தில் பிரதமர் மோடி மாற்றம் கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள மாற்றத்தை நாட்டின் எல்லா பகுதியில் உள்ள மக்களுக்கு இளைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும். தேச விஷயங்களில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகளவு இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இடமில்லை. காங்., மனதளவில் திவால் ஆகிவிட்டது.

Latest Tamil News
இந்தியாவின் ஜனநாயகம் பற்றி ராகுல் தனது வெட்கக்கேடான கருத்துக்களால் அவமதிக்கிறார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற வெளிநாடுகளிடம் இந்தியாவின் உள் விவகாரங்களை பற்றி பேசியது ஏற்றுக் கொள்ள முடியாது. நம் நாட்டில் தலையிட வெளிநாடுகளை அழைத்தது தவறு. இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கூறியது மன உளைச்சலை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (8)

  • பேசும் தமிழன் -

    மக்கள் விழித்து கொண்டு விரட்டி அடித்ததால் ..... காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ...பதவி இல்லாமல் ...பதவி வெறியில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அழைக்கிறார்கள் ....அந்த ஆற்றாமையின் வெளிப்பாடு தான். .இப்படிப்பட்ட தரங்கெட்ட பேச்சுகள் அவர்களிடம் இருந்து வெளிப்படுகின்றன !!!

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்படுவது போல் தெரிகிறது ,பத்திரிக்கைகள் மற்றும் இதர மீடியாக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தால் கருத்துக்களைத் தெரிவித்தால் அடக்கி வைக்கப்படுவது போல் உள்ளது .

  • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

    அதை சொல்வதற்கு நீங்கள் யார்? உங்களுக்கென்ன அதிகாரம்? நாட்டை விலைக்கு வாங்கிவிட்டீர்களோ?...ஜனநாயகம் என்ற போர்வையில், பேச்சுரிமை,எழுத்துரிமை மறுக்கப்படுகிறது... இவர்களுக்கு ஜிங் ஜாங் அடிக்காமல் உண்மை பேசியதற்காக, எத்தனை பத்திரிக்கையாளர்கள் சிறையில் இருக்கிறார்கள்? எத்தனை பத்திரிக்கையாளர்கள் மண்ணறையில் இருக்கிறார்கள்? ராகுல் கூறியதில் தவறொன்றுமில்லை...

  • பேசும் தமிழன் -

    இந்தியாவில் முன்பு ராகுல் அவர்களின் பாட்டி காலத்தில் தான் ஜனநாயகம் ஆபத்தில் இருந்தது !!!

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் தற்போது பொது மக்களுக்கே ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது, நமது நாட்டில் நடப்பது ஜனநாயகமா ,தெரியவில்லை .எங்கும் எதேச்சதிகாரம்தான் நடக்கிறது.

    • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

      அப்படியா அறிவாளியே எந்த நாட்டிற்கு போக விருப்பம், நான் பிரீ டிக்கெட் தருகிறேன்,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up