உலக கிளாக்கோமா வார விழிப்புணர்வு
நாமக்கல்: உலக கிளாக்கோமா வாரத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக கிளாக்கோமா வாரம், மார்ச், 12 முதல் 18 வரை, அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம், மகரிஷி கண் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம், நாமக்கல் கிளை சார்பில், 'உலக கிளாக்கோமா வாரம்-2023' கடைப்பிடிக்கப்பட்டது. ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி தலைமை வகித்தார்.
இதில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் முன் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம், நம் பார்வையை ரகசியமாக திருடும், 'கிளாக்கோமா' என்ற கண் நீரழுத்த நோய் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து, மகரிஷி கண் மருத்துவமனை மருத்துவர் ரங்கநாதன் கூறியதாவது:
நம் உடலில் ரத்த அழுத்தம் உள்ளதை போல், நம் கண்ணிலும் நீரழுத்தம் இருக்கும்; சில சமயம் கண்ணுக்குள் திரவ அழுத்தம் அதிகமாகி, கண் நரம்பை அழுத்தும்; நரம்பை தொடர்ந்து அழுத்தும் போது, மீண்டும் சரிசெய்ய முடியாத அளவுக்கு நரம்பு பாதிக்கிறது. முதலில் பக்கவாட்டு பார்வை பாதிக்க தொடங்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக, பார்வை நரம்பு முழுவதும் பாதித்து பார்வை முழுவதும் பறிபோகும் வாய்ப்புள்ளது. முறையான கண் பரிசோதனை செய்து கண் நீரழுத்தம் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஜெயக்குமார், இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு மாநில பொறுப்பாளர் மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!