முக்கோண பூங்கா மர்ம நபர்களால் சேதம்
ப.வேலுார்: ப.வேலுாரில், முக்கோண பூங்கா மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் பழைய பைபாஸ் சாலையில் அரிமா சங்கம் சார்பில், 2000ம் ஆண்டு முக்கோண பூங்கா கட்டப்பட்டது. அதில் உயரமான மின்கம்பங்கள் அமைத்து, நான்கு புறமும் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பூச்செடிகளை வைத்து ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து
நிர்வாகம் பராமரித்து வருகிறது.
இந்நிலையில், மர்ம நபர்களால் முக்கோண பூங்கா உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்த ஒரு பகுதி இரும்பு கம்பிகளை சிலர் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்திய பகுதியை அரிமா சங்க நிர்வாகிகள் சரி செய்ய முன் வர வேண்டும்' என்றனர். இது குறித்து டவுன் பஞ்., நிர்வாகத்தினர் கூறுகையில்,'முக்கோண பூங்கா பற்றிய தகவல் கிடைத்ததும் வந்து பார்த்தோம். இரும்பு கம்பி திருடிய மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்படும்' என்றனர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!