ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்
நாமக்கல்: தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் சவுந்தரம் தலைமை வகித்தார். மாநில தலைவர் இந்திரா பேசினார்.
கூட்டத்தில், தடுப்பூசி பணிக்கும், மேற்பார்வையிடுதல் பணிக்கும், வி.ஹெச்.என்., மற்றும் எஸ்.எச்.என்.,களுக்கு ஒதுக்கீடு செய்த ஊக்கத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்; 2019 முதல் வழங்கப்படாத நிலுவை தொகை, சில்லறை செலவின தொகை ஆகியவை வழங்க வேண்டும்; கொரோனா பணிக்கு அரசால் வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை, அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத்தலைவர் வைரம், மாவட்ட செயலாளர் சுமதி, பொருளாளர் ஜனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியாக, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சுகாதரத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!