அசலதீபேஸ்வரர் கோவிலில் பாதுகை பிரதிஷ்டை
நாமக்கல்: நாமக்கல், மோகனுார் காவிரி கரையில், பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி, மதுகரவேணி சமேதராக எழுந்தருளியுள்ள சுவாமி, காவிரியாற்றை பார்க்கும் வகையில் காட்சி அளிக்கிறார். இக்கோவிலில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள தீபம், எந்த புயல் காற்றிலும் அசையாமல் சீராக எரிவது குறிப்பிடத்தக்கது.
இங்கு, கர்நாடகா மாநிலம், சிருங்கேரி சாரதாபீட, 33வது பட்டம் சச்சிதானந்த சிவா அபிநவ நரசிம்மபாரதீ சுவாமியின் பாதுகை மற்றும் சிலை அமைக்கப்பட்டிருந்தது. கோவில் திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சன்னதிகள், பரிவாரங்கள் புதுப்பிக்கப்பட்டன. அப்போது, சிருங்கேரி சுவாமிகளின் பாதுகை மற்றும் சிலை (சிலாரூபம்) அகற்றப்பட்டு, அங்கு சதாசிவ பிரம்மேந்திரர் சன்னதி மற்றும் பாதுகை ஏற்படுத்தப்பட்டது. அதை கண்ட சிருங்கேரி சாரதா பீட பக்தர்கள், கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், சிருங்கேரி சுவாமிகளின் சன்னதி மற்றும் அது தொடர்புடைய பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்தை மறைத்ததாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மோகனுார் அசலதீபேஸ்வரர் கோவில் வளாகத்தில், நரசிம்ம பாரதீ சுவாமிகள் பாதுகை மற்றும் சிலாரூபம் கொண்ட சன்னதி அமைக்க, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது. தொடர்ந்து, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதீ சுவாமிகளின், 165வது ஜெயந்தி நாளான நேற்று, புனிதமான பாதுகையை விஸ்தாரமாக பூஜையும், அஷ்போத்திர அர்ச்சனையும் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!