சிப்காட் அமைப்பதை கைவிடக்கோரி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற மனு
மோகனுார்: மோகனுார் ஒன்றியத்தில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைப்பதை கைவிடக்கோரி, கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற, கொ.ம.தே.க., சார்பில் பஞ்., தலைவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், என்.புதுப்பட்டி, பரளி, லத்துவாடி ஆகிய பஞ்.,களில், தமிழக அரசு மூலம், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க, அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான நிலம் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளை நிலங்களில், தொழிற்பேட்டை அமைப்பதால், விவசாயம் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால், இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிட வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
வரும், 22ல், 'உலக தண்ணீர் தினத்தை' முன்னிட்டு, அனைத்து கிராம பஞ்.,களிலும், சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைய உள்ள பஞ்.,களில், தொழிற்பேட்டை அமைப்பதை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றக்கோரி, நாமக்கல் மாவட்ட கொ.ம.தே.க., மற்றும் 'சிப்காட்' எதிர்ப்புக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தெற்கு மாவட்ட கொ.ம.தே.க., செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமசிவம், மோகனுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் மற்றும் 'சிப்காட்' எதிர்ப்பு குழுவினர், அரூர், லத்துவாடி, பரளி, என்.புதுப்பட்டி, வளையப்பட்டி ஆகிய பஞ்., தலைவர்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!