நில பிரச்னையில் முன் விரோதம் பெண்களை தாக்கியவர் மீது வழக்கு
குளித்தலை: குளித்தலை அடுத்த, பாதிரிப்பட்டி பஞ்., பள்ளிப்பட்டி சேர்ந்தவர் ஜெயபால், 41. இவரது சகோதரர் பாஸ்கரன், தங்கை வசந்தா,35, ஆகியோர்களுக்கு பொதுவான நிலம் உள்ளது. தங்கை வசந்தா நிலத்தை பிரித்து கேட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சகோதர, சகோதரிகளுக்கும் இடையே நில சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த, 12ம் தேதி மதியம், 3:00 மணியளவில் ஜெயபால் வீட்டில், தங்கை வசந்தா, சங்கீதா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அப்போது பாஸ்கர், 'எப்படி நீதின்றத்தில் வழக்கு போட்டு விட்டு, எப்படி வீட்டுக்கு வந்தாய்' என, கேட்டு, தகாத வார்த்தைகள் பேசியவர், கீழே கிடந்த மூங்கில் குச்சி எடுத்து சகோதரி வசந்தாவை தாக்கினர். தடுத்த ஜெயபால் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரையும் தாக்கினர். மேலும்
சங்கீதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்தார். காயம்பட்ட சங்கீதா, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
சங்கீதா கணவர் ஜெயபால் கொடுத்த புகாரின் படி, தோகைமலை போலீசார் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!