பாதாள சாக்கடை மூடி சரிந்து சாலையில் பள்ளம்
கரூர்: கரூரில் பாதாள சாக்கடை மூடி சரிந்து, சாலையில் பள்ளம் விழுந்துள்ளது. சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ராஜாஜி சாலை, ரத்தினம் சாலை மற்றும் கோவை சாலை பகுதியில், நிலத்துக்கு அடியில் உள்ள, பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, சாலையில் பலமுறை பள்ளம் விழுந்தது. அதை மாநகராட்சி நிர்வாகம் பல நாட்கள் போராடி சரி செய்தது.
இந்நிலையில், கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், சில நாட்களுக்கு முன் மீண்டும், பாதாள சாக்கடை மூடி சரிந்தது. தற்போது, அதே பகுதியில் பள்ளம் விழுந்துள்ளது. பள்ளம் விழுந்த இடத்தில், இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன. ஆனால், சீரமைப்பு பணிகள் தொடங்கவில்லை. இதனால், கரூர் நகரில் இருந்து, ஜவஹர் பஜார் வழியாக, நெரூர், வாங்கல், பசுபதிபாளையம், தொழிற் பேட்டை பகுதிகளுக்கு கார், வேன்களில் செல்லும் பொது மக்கள், மாற்றுப் பாதை வழியாக சென்று வருகின்றனர்.
இதனால், கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், பாதாள சாக்கடை மூடி அருகே, பள்ளம் விழுந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளம் விழுந்த இடத்தில், சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!