Load Image
Advertisement

கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட, புறக்காவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூர் பஸ் ஸ்டாண்ட் ஏற்கனவே, நெருக்கடியான இடத்தில் செயல்பட்டு வருகிறது. கரூர்
பஸ் ஸ்டாண்ட்டுக்கு நாள் தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும், கரூரில் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்ட் எப்போதும், பரபரப்பாகவே இருக்கும்.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை தீர்க்க புறக் காவல் நிலையம், மாநகராட்சி கட்டடத்தில் அமைக்கப்பட்டது. தற்போது, அந்த கட்டடம் இடிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை சாலையில், போலீசார் வசதிக்காக புறக்காவல் நிலையம், 'ஏசி' வசதியுடன் அமைக்கப்பட்டது. ஆனால், அதை திறக்காமல், கரூர் டவுன் போலீசார் பூட்டி வைத்திருந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று காலை புதிய புறக் காவல் நிலையத்தை, எஸ்.பி., சுந்தர வதனம் திறந்து வைத்து, போக்குவரத்து போலீசாருக்கு, கோடைக்காலத்தையொட்டி, நீர்மோர் வழங்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
அப்போது, கூடுதல் எஸ்.பி., கண்ணன், டவுன் டி.எஸ்.பி., சரவணன்,
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விதுன்குமார், சரவணன், புண்ணிய மூர்த்தி உள்பட போலீசார் பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement