Load Image
Advertisement

சூரியகாந்தி விலை வீழ்ச்சி

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பகாப்பட்டி, சிவாயம், இரும்பூதிப்பட்டி, சரவணபுரம், வயலுார், குழந்தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது செடிகளில் இருந்து சூரியகாந்தி விதை அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட விதைகளை வெயிலில் உலர்த்தி தரத்துடன் விற்பனைக்கு தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சூரியகாந்தி விதை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் கிலோ, 82 ரூபாய் விற்றது. தற்போது, 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், 'கிணற்று நீர் பாசன முறையில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் அதிகமான சூரிய
காந்தி பரப்பளவு அதிகரித்து சாகுபடி நடந்துள்ளதால் கூடுதல் வரத்து காரணமாக விலை குறைந்து விற்பனை நடக்கிறது. குறைந்த விலை காரணமாக விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யாமல், வீட்டில் இருப்பு வைத்துள்ளனர். விலை உயர்ந்தால் மட்டும்
விற்பனை செய்வர். இவ்வாறு கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement