பெரியமாரியம்மன் கோவில் திருவிழா: பந்தல் அமைக்கும் பணிகள் துவக்கம்
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில் குண்டம் தேர்த்திருவிழா வரும், 21ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 25ல் கம்பம் நடுதலும், 30ல் கொடியேற்றுதலும், ஏப்., 4ல் குண்டம் பூ இறங்கும் விழாவும், 5ல் பொங்கல் விழாவும், தேரோட்டமும், 8 ல் கம்பம் எடுத்தலும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்க உள்ளது. விழாவுக்காக மீனாட்சிசுந்தரனார் சாலையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே இருந்து மாநகராட்சி தலைமை அலுவலகம் வரை சாலையின் இரு புறத்தையும் இணைத்து மிக பிரமாண்ட பந்தல் அமைக்கப்படும். இதன் கீழ், 37 பெரிய கடைகளும், 100க்கும் மேற்பட்ட சாலை ஓர கடைகளும், போலீஸ் கட்டுப்பாட்டு அறை, பிரசாதம் வழங்கும் இடம் போன்றவை அமைக்கப்படும். இதற்காக நேற்று பந்தல் அமைக்கும் பணி துவங்கியது.
தீ தடுப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பு கம்பிகள், தடுப்புகள், தகரத்தால் ஆன ஓலைகள் வேயப்பட்டு பந்தல் அமையும். இதற்கான பணி, அடுத்த ஐந்து நாட்களில் நிறைவு செய்து, அதே நேரம், பந்தலுக்கு கீழே கடைகள் அமைக்கும் பணியும் நிறைவு செய்ய உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!