Load Image
Advertisement

வெளிநாட்டின் தலையீட்டை கோரவில்லை: பார்லி., குழுவிடம் ராகுல் விளக்கம்?

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: லண்டனில் நடந்த கருத்தரங்கில் பேசிய பேச்சு குறித்து பார்லிமென்ட் குழுவிடம் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, அவர், ஜனநாயகம் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பினேன். அதனை தேச விரோதம் என முத்திரை குத்தக்கூடாது. வெளிநாட்டின் தலையீட்டை கோரவில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

டில்லியில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்ந்த பார்லிமென்ட் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ராகுல் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், லண்டனில் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பினேன். இதனை தேசவிரோதம் என முத்திரை குத்தக்கூடாது. இந்தியாவில், வேறு எந்த நாடும் தலையிட வேண்டும் என நான் கோரவில்லை. நான் பேசியது உள்நாட்டு விவகாரம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ராகுல் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: இந்த கூட்டத்தில் முதலில் ராகுல் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எம்.பி.,ஒருவர், ராகுலின் லண்டன் பேச்சு குறித்துகேள்வி எழுப்பியதை தொடர்ந்து அவர் விளக்கம் அளித்தார். இதற்கு பா.ஜ., எம்.பி., ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு இது சரியான இடமல்ல என்றார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், வேறு சிலர், தனது பேச்சு குறித்து விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆதரவு உள்ளதாக தெரிவித்தார்.

Latest Tamil News
மற்றொரு பா.ஜ., எம்.பி.,ஒருவர் பேசும்போது, இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் என்பது, ஜனநாயகத்திற்கு விழுந்த பெரிய அடியாகும். ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை சிலர் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் என்றார்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட ஜெய்சங்கர், அனைத்து உறுப்பினர்களையும் சமாதானப்படுத்தியதுடன், இந்த விவகாரம் குறித்து இங்கு பேச வேண்டாம். அதற்கு சரியான இடம் பார்லிமென்ட் தான் எனக்கூறியதுடன், ராகுலையும், அவரது பேச்சு குறித்து பார்லிமென்டில் விளக்கமளிக்கும்படி கூறினார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


வாசகர் கருத்து (22)

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    இவர் மணி சங்கர ஐயர் அவர்களின் தயாரிப்பு என்று தெரிகிறது. ஐயர் அவர்கள் பாகிஸ்தானை மண்டியிட்டு கேட்டார். இவர் மேலை நாடுகளின் கால்களில் விழுந்து கேட்கிறார். அவ்வளவுதான்.

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    ஜால்ரா போட்டு அல்லகைகள் பிதற்றலுக்கு ஆமாம் சாமி போடுகிறவர்கள் இருக்கிறவரைக்கும் சாக்கடை வாயன் எங்கயாவது வெளிநாட்டில் ஒளறிட்டே இருப்பான். இதே இவன் முஸ்லீம் நாட்டில் பிறந்து அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளில் பேசி இருந்தால் இந்நேரம் இவன் போட்டிருக்கும் கீழ் அங்கியில் பயத்தில் மனிதக்கழிவு ஈரம் செய்து விட்டு நாற்றம் பிடிக்க வைத்து இருப்பான் .. விஷயம் தெரியாமல் ஒரு உளறல்.. பப்பு என்கிற ஜோக்கர்

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    நீ பேசுறது உனக்கே புரியலயாடா? அப்புறம் எதுக்கு நீ மைக் கிடைத்தால் பேசுற... நாட்டின் சாபம் காந்திகளும் அவன் குடும்பமும்... தேச துரோகத்தின் மொத்த உருவம் இவன்

    • பேசும் தமிழன் - ,

      அவன் காந்தி குடும்பம் இல்லை.போலியாக காந்தி என்று பெயரை வைத்து நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறான்.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    அஙகு பேராசும் போது எதிரில் நின்றவர்கள்ளை பார்த்து சிறிது ஜில் தட்டி கொஞ்சம் உணர்ச்சி அதிகமாகி வாய் பேசி விட்டது . நான் அஙகு தானெ பேசினேன் இங்கு பேச வில்லையெ. வாய் பேசியதற்கு எனக்கும் சம்பந்த மில்லை. நான் எப்படி பொறுப்ப்பாகும்

  • Nachi - ,

    அது போன மாசம்,நான் சொன்னது இந்த மாசம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up