சூறாவளி காற்றால் அறுந்து விழுந்த மின் கம்பிகள்
சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில், பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அடர்ந்த வனப் பகுதியில், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால், இரவு முதல் மின்சாரம் இல்லாமல் தாளவாடி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது.
இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதேபோல் பல கிராமங்களில் மரங்கள் வீட்டின் மீது சாய்ந்து சேதம் ஏற்பட்டது.
நெய்தாளபுரம் கிராமத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதில், அடர்ந்த வனப்பகுதியில் பவானிசாகரில் இருந்து தாளவாடிக்கு மின் வினியோகம் செய்யப்படும் பிரதான மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரம் இல்லாமல் தாளவாடி பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டன.
நேற்று காலை சென்ற மின்வாரிய பணியாளர்கள், அறுந்த மின் கம்பிகளை சரி செய்தனர். அதன் பிறகு மின்சாரம் சீரானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!