கூகலூர் கிளை வாய்க்கால் பாலம்: விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்
கோபி: கூகலுார் கிளை வாய்க்கால் பாலம் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
கோபி-அத்தாணி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில், 22 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு மீட்டர் அகலமுள்ள சாலையை, பத்தரை மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணி கடந்தாண்டில் துவங்கியது.
அதேபோல் அதன் வழித்தடத்தில், புதுக்கரைப்புதுார் மேடு என்ற இடத்தில், கூகலுார் கிளை வாய்க்காலின் குறுக்கே இருந்த பழைய பாலமும் விரிவாக்கம் செய்யும் பணியும் துவங்கியது. ஆனால், அப்போது கூகலுார் கிளை வாய்க்காலில், பாசனத்துக்கு தண்ணீர் திறந்திருந்ததால், கட்டமைப்பு பணி மேற்கொள்வதில் சிரமம் இருந்ததால் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் கடந்த, 3 முதல், கூகலுார் கிளை வாய்க்காலில், பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால், தற்போது பாலம் கட்டுமான பணி நடக்கிறது.
தற்போது வரை பாலம் கட்டுமான பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ளது. எஞ்சிய பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!