Load Image
Advertisement

போலீஸ் டைரி - சேலம்

பெண்ணுக்கு கத்திக்குத்து
சேலம்: கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் நாகதேவி, 47. இவரது கணவர் ஜெயச்சந்திரன், சில ஆண்டுக்கு முன் உயிரிழந்தார். இதனால் நாகதேவி, சேலத்தை சேர்ந்த செந்தில் என்பவருடன் வசித்து வந்தார். அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் செந்தில் கத்தியால் நாகதேவியை குத்தினார். காயமடைந்த நாகதேவி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

10 ஆடுகள் மர்மச்சாவு
சேலம்: அழகாபுரம், பெரியபுதுார் கணபதி நகரை சேர்ந்த, விவசாயி நஞ்சப்பன், 67. இவர் வீட்டில், 10 ஆடுகள், 6 மாடுகளை வளர்த்தார். நேற்று முன்தினம் இரவு வீடு அருகே ஆடுகளை கட்டி வைத்துள்ளார். நேற்று காலை பார்த்தபோது, 10 ஆடுகளும் வயிற்றில் கடிபட்டு குடல் வெளியே வந்தபடி இறந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த நஞ்சப்பன் அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். வயிற்றில் கடிக்கப்பட்டு ஆடுகள் உயிரிழந்திருப்பதால் செந்நாயாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

போதைப்பொருள் தடுக்க கூட்டம்
ஆத்துார்: ஆத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் (பொ) தலைமையில் போலீசார், வனத்துறையினருடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் கல்வராயன்மலை
பகுதியில் சாராயம், வெளி மாநில மது வகை உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல், விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். அந்த வழக்கில் சிக்குபவர்களின் வங்கி கணக்குகளை முடக்க அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் பச்சமலை, எடப்பாடி உள்ளிட்ட மலைக்கிராம மக்களிடம், போதை பொருட்கள் விற்பனை, கடத்தல், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள்
வைத்திருக்கக்கூடாது என, கெங்கவல்லி, தம்மம்பட்டி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement