போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் ஸ்மார்ட் கார்டு வழங்க கோரிக்கை
சேலம்: தமிழ்நாடு போக்கு வரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு பொன் விழா மாநில மாநாடு, சேலம் முள்ளுவாடி கேட் அருகே நேற்று நடந்தது. மாநில தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் துணைத்தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
அதில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பணியாளர்களை பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, டிரைவரின், 'ஸ்மார்ட் கார்டு'களை திருடிய வெளியாட்கள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., மூலம் விசாரித்து நடவடிக்கை எடுத்தல்; காலியாக உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்புதல்; ஓட்டுனர்களுக்கு புது 'ஸ்மார்ட் கார்டு' அனைத்தும், தனியார் நிறுவனம் மூலம் பகிர்ந்தளிக்கப்படுவதை தவிர்த்து போக்குவரத்து துறை அலுவலகங்கள் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்பட, 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சேலம் மாவட்ட தலைவர் இம்ராம் செரீப், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில், சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ''பழைய பென்ஷன் திட்டம், காலமுறை ஊதியம், டாஸ்மாக், ரேஷன் கடை பணியாளர் கோரிக்கைகள் என, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 28ல் மாநிலம் முழுதும் அனைத்து துறை பணியாளர்கள், அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும்,'' என்றார்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!