கொஞ்சம் கலர் மாறி இருந்தாலும், அந்த அரிசியைத் தொடுவது கூட கிடையாது. பளபளப்பான அரிசியில் எந்த பயனும் இல்லை என்பதை அறிந்தும் அதை நாம் சாப்பிடுவது தான் வேதனையான விஷயம்.
ஆனால் நமது முன்னோர்கள் ஒவ்வொரு உணவையும் பார்த்துப் பார்த்து சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். அதற்குக் காரணம் பாரம்பரிய அரிசி ரகங்கள் தான். அதில் ஒன்று தான் இந்த பூங்கார் அரிசி. மாப்பிள்ளைகளுக்கு எப்படி மாப்பிள்ளைச் சம்பா அரிசி சிறந்ததோ, அதேபோல் இந்த பூங்கார் அரிசி பெண்களுக்குச் சிறந்தது ஆகும்.
பூங்கார் அரிசி
இந்த பாரம்பரிய அரிசி வகையானது வறண்ட மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களில் செழித்து வளரக்கூடியது. 1980-இல் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்ட வகையாகும்.
இந்த அரிசி வகையில் பெண்களின் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளதால், ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்னைகளை இது சரிசெய்கிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு
கருவுற்ற பெண்கள் தினமும் இந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், குழந்தை வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். ஆறு மாத காலங்களுக்குப் பூங்கார் அரிசியைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட்டு வந்தால், சுகப்பிரசவமாகும். அதோடு தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும்.
சத்துக்கள்
இந்த அரிசியில் ஜிங்க், இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி1, கார்போ ஹைட்ரேட், ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளதால், அல்சரை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கவும் பூங்கார் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. பூங்கார் அரிசியில் குழந்தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்தால் செரிமான பிரச்சினையைத் தடுப்பதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டையும் போக்கும்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!