செக் மோசடி வழக்கு: உறுதியானது சிறை
கோவை : கோவை அருகேயுள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்த மாராத்தாள், கணபதி தனியார் இன்ஜினியரிங் நிறுவன இயக்குனர் மகேஷ்குமார் என்பவருக்கு, ஒன்பது லட்சம் ரூபாய் கடன் வழங்கினார்.
பணத்தை திருப்பி செலுத்த காசோலை கொடுத்தார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. ஜே.எம்:6, கோர்ட்டில் 2015ல், மாராத்தாள் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், மகேஷ்குமாருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, 2020ல் உத்தரவிட்டது.
தண்டனையை எதிர்த்து, கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் மகேஷ்குமார் அப்பீல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், கீழ்கோர்ட் அளித்த ஓராண்டு சிறை தண்டனையை, உறுதி செய்து தீர்ப்பளித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!