ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1,200 கன அடியாக சரிவு
ஒகேனக்கல் : ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 1,200 கன அடியாக சரிந்தது.
தமிழக - கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீரின்றி பாறைகள் தென்படுகின்றன. மேலும், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 1,200 கன அடியாக சரிந்தது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகள் நீரின்றி, பாறைகளாக காட்சியளிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!