டாஸ்மாக் சரக்கு விற்ற பெண்கள் கைது
பெரம்பலுார் :அரியலுார் அருகே, மதுபானம் விற்ற இரண்டு பெண்களை, போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் எஸ்.ஐ., திருவேங்கடம் தலைமையிலான போலீசார், ரோந்து சென்றனர். அப்போது, பருக்கல் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி,50, வேம்பு,42, ஆகிய இருவரும், டாஸ்மாக் மது பாட்டில்களை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!