Load Image
Advertisement

இயர்போன் தொடர்ந்து பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?

Tamil News
ADVERTISEMENT
செல்போன் முதல் கேஜட்களின் வரவு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் தவிர்க்க முடியாதது இயர்போன். இப்போது எங்குப் பார்த்தாலும் இயர்போனை மாட்டிக் கொண்டே செல்வது வழக்கமாகி விட்டது.

காலையில் இயர்போனுடன் தொடங்கும் நாள், இரவு வரை அது தொடர்கிறது. இதனால் நன்மைகளை விடத் தீமைகள் தான் அதிகம். குறிப்பாகச் சாலையில் செல்லும் போதும், வாகனங்கள் இயக்கும் போதும், இயர்போனை மாட்டிச் செல்வதால் விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. இதுமட்டுமல்லாமல் இயர்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் காது திறன் பாதிக்கப்படும். காது மட்டுமல்லாமல் உள் உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Latest Tamil News இதை தவிர்க்க இயர்போனை பயன்படுத்துபவர்கள், பின்வரும் நான்கு விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டால், காதுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

நாம் காதுகளில் இயர்போனை பயன்படுத்தும் போது காற்றோட்டம் முழுவதும் நிறுத்தப்படும். இதனால் ஈரப்பாதம் காதின் உள்ளே தங்குவதால், நாம் பயன்படுத்தும் நேர அளவிற்கு ஏற்ப பாக்டீரியா தொற்று அதிகரித்துக் கொண்டே போகும்.
Latest Tamil News இதனால் காதுகளில் அரிப்பு, தண்ணீர் வருவது போன்ற உணர்வு, சிறியளவில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதைக் கவனிக்காமல் தொடர்ந்து இயர்போன் பயன்படுத்தும் போது, காதுகளுக்குப் பெரியளவில் பாதிப்பை உண்டு பண்ணலாம்.

நாம் பயன்படுத்தும் இயர்போன் 100-110 டிபி சவுண்ட் வரை கொடுக்கும். ஆனால் நமது காதுகளுக்கு 85டிபி சவுண்ட் அளவு மட்டுமே பாதுகாப்பானது. இதனால் வால்யூமை 60 சதவீதத்திற்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
Latest Tamil News இப்படி 60 சதவீதத்திற்குள்ளேயே வால்யூமை வைத்துப் பயன்படுத்தும் போது, கூட தொடர்ந்து இயர்போனை பயன்படுத்தாமல், சிறுசிறு இடைவெளி விட்டுப் பயன்படுத்துவது நல்லது.

இன்றைய சூழலில் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று, இயர்போனை மாற்றிப் பயன்படுத்துவது. இப்படி நமது நண்பர்களிடமிருந்து இயர்போனை வாங்கி பயன்படுத்தும் போது, அதைச் சுத்தம் செய்து தான் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
Latest Tamil News இதனால் இயர்போனின் பயன்பாட்டை அளவோடு வைத்தால் காதுகளின் பாதுகாப்பு என்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement