ராமேஸ்வரம் கடலில் 5.30 கோடி இறால் குஞ்சுகள்: எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தடுக்க முயற்சி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் 5.3 கோடி பச்சை வரி இறால் குஞ்சுகளை விட்டு மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சாதித்தனர்.
![Latest Tamil News]()
பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானிகள் பச்சை வரி இறால் குஞ்சுகளை வளர்த்து மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடலில் விடுகின்றனர்.
அதன்படி நேற்று தலைமை விஞ்ஞானி தமிழ்மணி, விஞ்ஞானி ஜான்சன் ஆகியோர் மண்டபம் முனைக்காடு கடலில் மீனவர்கள் மூலம் படகில் சென்று 10.20 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகளை விட்டனர்.
![Latest Tamil News]()
இந்த இறால் குஞ்சுகள் 3 முதல் 4 மாதங்களில் 100 முதல் 150 கிராம் வரை வளர்ந்து மீனவர் வலையில் சிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய கடல் பகுதியில் மீன் உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் ராமேஸ்வரம் மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதை தடுக்கலாம்.
மேலும், இறால் மீன்பிடிப்பால் மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 2022 பிப்., முதல் தற்போது வரை 5.30 கோடி இறால் குஞ்சுகளை ராமேஸ்வரம், மண்டபம் கடலில் விட்டு உள்ளதாக, கூறினர்.

வாசகர் கருத்து (10)
நீங்க விட்ட இடத்தல அப்படியே நிக்குமா வேற இடத்துக்கு நகர்ந்து செல்லாதா நீங்க விட்ட இடத்துலே கடல் உணவ சாப்புட்டு 100 கிராம் வளர்ந்துரும் மினவர்கள் நீங்க விட்ட இடத்துல வளைய போட்டா நிறையா கிடைச்சுரம் அப்புறம் அவுங்க கடல் தாண்டி மீன் புடிக்க போக மாட்டாங்க
நாளைக்கி அவை இலங்க பக்கம் போனாலும்.புடிச்சி கொண்டாந்துரலாம்.
That is Modiji. Not one media in TN will write these. They want all issues to be unresolved. Modi is for solution.
இதுக்கு பேசாம அரசே இறால் வாங்கி ரேஷன் கடையில் மலுவா குடுக்கலாம். இங்கே உடற இறால் குஞ்சுகள் இலங்கை பக்கம் ஓடிப் போயிரும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இதுவே நாங்களா இருந்தா திராவிட மாடல் அதுமேல ஸ்டிக்கர் ஒட்டி இருப்போம்.