ADVERTISEMENT
குப்பண்ணா.''வேற ஆளே கிடைக்காம, பழையவரிடம் பொறுப்பை ஒப்படைக்க போறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த துறை விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பட்டுப் புடவைக்கு பிரசித்தி பெற்ற ஊரின் அரசு தலைமை மருத்துவமனையில கண்காணிப்பாளரா இருந்த பெண் அதிகாரியை தான் சொல்றேன்... கூடுதல் பொறுப்பா இதை பார்த்துட்டு இருந்தவங்க மேல, ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வந்துச்சு பா...
''போன மாசம் சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் வந்து, அவங்களிடம் விசாரணை நடத்தினாங்க... அப்புறமா, பெண் அதிகாரி 'லீவ்'ல போயிட்டாங்க பா...

''கண்காணிப்பாளர் பதவிக்கு, மருத்துவமனையில இருக்கிற சீனியர் டாக்டர்கள் பலரிடம் கேட்டும், யாரும் வர மாட்டேங்கிறாங்க...
''இதனால, நிர்வாக சிக்கல்கள் வருது... பழைய அதிகாரிக்கு சென்னையில செல்வாக்கு இருக்கிறதால, அவங்களையே மறுபடியும் கண்காணிப்பாளர் பதவிக்கு நியமிக்க போறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''கல்பனா மேடம் ஆத்துல ஒரு வேலை இருக்கு... கிளம்பறேன் ஓய்...'' என குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
வாசகர் கருத்து (6)
ஊழல் செய்வதில் வல்லவர்கள் மாடல் அரசால் வரவேற்கப்படுகிறார்கள்?
ஊழல் புகாரில் சிக்கியவருக்கு மீண்டும் பொறுப்பு?.- ஓ, இதுதானா திராவிட மாடல், விடியல் மாடல் ...? நல்ல மாடலப்பா...?? நேர்மையான முதல்வருக்கு இதுபோன்ற நிகழ்வுகளால் தூக்கம் கெடவேண்டும். ஆனால் கெடுவதில்லை. ஏன்?
ஊழல் புலி அணில் மீண்டும் மந்திரி ஆகலாம். தில்லு முல்லு மாடல் ஸ்டைல் அதுதான்
தொழிலுக்கு தகுந்த சன்மானம் என்பது தி. மாடலில் உறுதி செய்யப்படும். மாடலுக்கு எதிராக இருந்தால் மிரட்டல், அடி, உதை, மாற்றல் எல்லாம் வரும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
ஊழல் செய்வதெப்படி என்று கூவம் முதலைகளை கேட்டால் தெரியும்