ADVERTISEMENT
திருமங்கலம், : மதுரைமாவட்டம் திருமங்கலம் அருகே தும்மக்குண்டு சரவணாஸ் மெட்ரிக் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் கண்டக்டர் பலியானார். 4 மாணவர்கள் காயமுற்றனர்.
நேற்று காலை மாணவர்களை அழைத்து வர பள்ளி வேனில் டிரைவர் சாந்தகுமார், கண்டக்டர் ராஜா 55, சென்றனர். மேட்டுப்பட்டியில் இருந்து 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது குறுகிய ரோட்டில் நிலைதடுமாறிய வேன் ரோட்டோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் படிக்கட்டில் நின்றபடி பயணித்த ராஜா, இடிபாடுகளில் சிக்கி பலியானார். மாணவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!