திருச்சி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை (மார்ச்: 19) லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற காரும், திருச்சியிலிருந்து கரூருக்கு மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரியும் திருவாசி அருகே திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த 9 பேரில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து காரணமாக திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் 3 கி.மீ நீளத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்ட எஸ்.பி., சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

வாசகர் கருத்து (10)
புதிய அரசு பதவி ஏற்றபின் நேருநகர், கிரோம்பேட்டையில் இதுவரை குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்கவில்லை.
Every severe accident needs analysis and corrective action. Some GPS gadget to monitor the night vehicles may be installed.
திருட்டு திமுக உருட்டு வேலை தான் செய்யும் தவிர ரோடு எல்லாம் போடாது
இதுநாற்கர சாலையின்னு அறிவிக்கப்பட்டு இன்னும் முடிக்கப்படாமல் இருக்கு.
இந்தப் பகுதியில் இரவு நேரத்தில் லாரிகள் போக்குவரத்து தடை செய்யப் பட வேண்டும். இவுனுங்க ரோதனை தாங்காமத்தான் பிரைவேட் பஸ்கள், கர்னாடகா பஸ்கள் முசிறி, குளித்தலை வழியாகச் செல்கின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சாலை விரிவாக்கம் அல்லது புதியசாலை அமைக்க திட்டம் தீட்டினால் "தாம் தோம்" எனக் குதிக்க வேண்டியது. இப்படி அசம்பாவிதம் பரிதாபமாக நடக்கையில் சாலையைப் பற்றிப் பேச வேண்டியது...அது தான் நம்ம புத்தி